தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நியூயார்க் டைம்ஸ்’ குறுக்கெழுத்துப் புதிர்ப் போட்டியில் திரிஷா

1 mins read
dd7375da-bb4f-4dcf-b47b-e10cefdcd029
குறுக்கெழுத்துப் புதிரில் திரிஷாவின் பெயர் காணப்படுகிறது. - படம்: ஊடகம்

தமிழ், தெலுங்குத் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நாயகியாக நடித்து வருகிறார் திரிஷா. தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’, ‘தக் லைஃப்’, ‘விஷ்வம்பரா’, ‘ராம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ அதன் ‘குறுக்கெழுத்துப் புதிர்ப் போட்டி’யில் திரிஷாவைப் பற்றி ஒரு கேள்வியைக் கேட்டுள்ளது.

‘கிருஷ்ணன் நடிகை, தென்னிந்திய சினிமா,’ என அதற்கான ‘க்ளூ’வையும் கொடுத்துள்ளது. 52வது வார்த்தைக்கான விடையாக அந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தமிழ் நடிகை ஒருவரது பெயர் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்று என்று நடிகை சமந்தா அந்த குறுக்கெழுத்து பக்கத்தைப் பகிர்ந்து திரிஷாவை ‘குயின்’ எனக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

சமந்தாவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் திரிஷா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்