மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் திரிஷா.
நடிகர் சூர்யா அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடிக்கவுள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே சூர்யா, திரிஷா இணைந்து ‘மௌனம் பேசியதே’, ‘ஆறு’, ‘ஆயுத எழுத்து’ ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.