நடிகை திரிஷா செல்லப்பிராணிகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்.
அவர் செல்லமாக வளர்த்த நாய் ஒன்று கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்துவிட்டது. இதனால் துக்கத்தில் மூழ்கியிருந்த அவர், சமூக ஊடகங்களை விட்டு விலகியே இருந்தார்.
அவர் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீட்டின் போதும்கூட ஒரே ஒரு பதிவை மட்டும் அவரது சமூக ஊடகப்பக்கத்தில் காண முடிந்தது.
இந்நிலையில், திரிஷா வீட்டுக்கு புதிய வரவாக ஒரு நாய்க்குட்டி வந்து சேர்ந்துள்ளது. அதற்கு ‘இஸ்ஸி’ என்று பெயர் சூட்டியுள்ளாராம்.
“இஸ்ஸிதான் என்னைக் காப்பாற்றினாள். என் வாழ்க்கையில் ஒளி தேவைப்பட்டபோது அவளை என்னிடம் அனுப்பி வைத்துள்ளார்.
“இனி என் காதலர் இஸ்ஸிதான் என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்,” திரிஷா.

