ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அப்படத்தில் இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூவா தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் படத்தின் முக்கியக் காட்சிகளில் பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ஒருவார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும் என்றும் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 7 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.