‘தாய் கிழவி’ என்ற படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘சேயோன்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார்.
அந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சில நாள்களுக்கு முன்னர் ‘சேயோன்’ படத்தின் அறிவிப்புக் காணொளி ஒன்று வெளியானது. அது ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ‛மாயோன்’ படத் தயாரிப்பு நிறுவனமான ‘டபுள் மீனிங் புரோடக்ஷன்’, தான் 2023ஆம் ஆண்டிலேயே ‛சேயோன்’ படத்தின் தலைப்பைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
‘மாயோன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘சேயோன்’ படத்தை எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து புகார் அளித்துள்ளனர்.
இதன்காரணமாக சிவகார்த்திகேயனின் ‛சேயோன்’ படத் தலைப்புக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

