கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது: மிருணாள் தாகூர்

கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது: மிருணாள் தாகூர்

1 mins read
e8d24f5e-c6ee-4aef-8c05-5d96796dc6b0
மிருணாள் தாகூர். - படம்: பின்டர்ரஸ்ட்

பாலிவுட், தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம்வரும் மிருணாள் தாகூர், விரைவில் தமிழ்த் திரையுலகிலும் முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக அறிமுகமாக உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி குறித்துக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

“நாம் எதை எதையோ மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையான மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் கொடுப்பதில்தான் உள்ளது.

“பெரிய அளவில் கொடுக்க முடியாவிடினும் நம்மால் முடிந்த அளவு வறுமையில் இருப்போருக்கு உதவிகளைச் செய்யலாம்.

“கர்மாமீது எனக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது. நாம் செய்யும் உதவிகள் நமக்கு ஏதேனும் பலன் தருமா என்ற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை.

“நாம் செய்யும் சிறிய உதவி, யாருக்காவது ஒருகணமாவது மகிழ்ச்சியைத் தந்தால் அதுவே எனக்குப் போதும்,” என்று மிருணாள் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த மனிதநேயப் பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

குறிப்புச் சொற்கள்