நான் சற்றும் எதிர்பாராத திருப்பம்: நிகிலா

1 mins read
37b8801b-6558-4e3b-835f-b6f4e2de8580
நிகிலா விமல். - படம்: மாத்ருபூமி.காம்

‘ஜனநாயகன்’ படம் குறித்த நேரத்தில் வெளியாகாததால் வேறு சில படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நிகிலா விமல் நடித்துள்ள ‘பெண்ணோ கேஸ்’ படமும் பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.

“இது நான் சற்றும் எதிர்பாராத திருப்பம். கடந்த 10ஆம் தேதி கேரளாவிலும் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவில்லை.

“இதனால் நான் நடித்துள்ள படத்தை ஒரு வாரம் முன்பே வெளியிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஆச்சரியங்கள் எப்போதாவதுதான் நடக்கும்,” என்று உற்சாகப்படுகிறார் நிகிதா விமல்.

பொங்கல் சமயத்தில் தொடர் விடுமுறை கிடைப்பதால் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் படம் பார்க்க திரையரங்குகளில் திரள்வார்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்பதே நிகிலாவின் மகிழ்ச்சிக்குக் காரணம்.

“என்னதான் மலையாளத்தில் பெயர் பெற்ற நடிகையாக வலம்வந்தாலும் தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் என் மனத்தில் இருக்கிறது.

“மிக விரைவில் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையும் என நம்புகிறேன்,” என்கிறார் நிகிலா.

குறிப்புச் சொற்கள்