அனிருத் இசையமைத்திருக்கும் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “நான் இசையமைத்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அவற்றில் முதலில் ‘கிங்டம்’ படம் வெளியாகும். அதன் 40 நிமிடக் காட்சிகளைப் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. அடுத்து ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ முழுப்படமும் பார்த்துவிட்டேன். மிகவும் அற்புதமாக, புதுமையாக இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, அமிர்கான், ஷ்ருதிஹாசன், சவுபின் சாகீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.