தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே நாளில் வெளியாகும் சமுத்திரகனியின் இரண்டு படங்கள்

1 mins read
5a3f1899-4f11-4ec5-a412-07c0bacdb83d
சமுத்திரகனி ‘ராஜாகிளி’, ‘திரு மாணிக்கம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். - படம்: ஊடகம்

ஒரே நாளில் சமுத்திரகனியின் இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன.

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரகனி. இவர் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்.

இவர் தற்போது ‘ராஜாகிளி’, ‘திரு மாணிக்கம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

அதில், இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ள திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’. நடிகை அனன்யா இந்தப் படத்தில் சமுத்திரகனியின் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

மற்றொன்று, சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்துள்ள ‘ராஜாகிளி’ படம். இந்தப் படத்திற்கு தம்பி ராமையா கதை, வசனம் எழுதியுள்ளார். அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இதில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 50 வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படமும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்