இது இசை நிகழ்ச்சிகளுக்கான காலகட்டம் போலிருக்கிறது.
அனிருத் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதையடுத்து, இளையராஜா பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றைப் படைக்க உள்ளார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் வித்யாசாகர், விஜய் ஆண்டனி ஆகியோரும் இதேபோல் களமிறங்கிவிட்டனர்.
இருவரது இசை நிகழ்ச்சிகளுமே கோயமுத்தூரில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 20ஆம் தேதி வித்யாசாகரும் 21ஆம் தேதி விஜய் ஆண்டனியும் தங்களது இசைக்குழுவினருடன் கோவை மக்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.
இரு நிகழ்ச்சிகளுக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.