பாக்யராஜால் பார்வை பெற்ற இருவர்

பாக்யராஜால் பார்வை பெற்ற இருவர்

1 mins read
533a19d6-fb30-46db-8a31-3c01d48a663a
பாக்யராஜ். - கோப்புப் படம்: தினமணி

அண்மையில் காலமான இயக்குநர் பாக்யராஜ் தனது இரு கண்களையும் தானம் செய்திருந்தார். இதன்மூலம் இருவருக்குப் பார்வை கிடைத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் இருவருக்கு பாக்யராஜின் கண்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன.

தன் கண்களைத் தானம் செய்த பாக்யராஜின் இந்தச் செயல், கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பாக்யராஜின் கண்களைத் தானமாகப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இந்திய மருத்துவ விதிகளின்படி வெளியிடப்படவில்லை.

பாக்யராஜ் காலமான பின்னர் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது திடீரென அந்த நிகழ்வு தடைப்பட்டது.

சில நிமிடங்களில் அங்கு வந்த மருத்துவக் குழுவினர் பாக்யராஜின் கண்களைத் தகுந்த முறையில் அகற்றி, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்