துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித், கடந்த சில நாள்களாக அங்கேயே தங்கியுள்ளார்.
இதையறிந்த தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் துபாய்க்கே சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித்தைக் காண துபாய் ரசிகர்கள் நாள்தோறும் அவரது குழுவினர் பங்கேற்கும் இடத்தில் திரண்டுவிடுகிறார்கள். அவர்களுடன் இயன்றவரை புகைப்படம் எடுத்துக்கொள்ள முன்வந்து மகிழ்விக்கிறார். ஆனால், சில ரசிகர்கள் வரம்பு மீறி நடந்துகொள்வது அவரைக் கோபப்படுத்தி உள்ளதாம்.
அண்மையில் அஜித்தைக் காண வந்த ரசிகர்களில் சிலர், அவர் பயிற்சி பெறும் விளையாட்டு அரங்கத்தில் இருந்த விலையுயர்ந்த கார்களின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுப்பது, விசில் அடிப்பது என்று மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்துகொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து ரசிகர்கள் அத்துமீறும்போது உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு வரும் அஜித், ரசிகர்களிடம் கண்டிப்புடன் பேசுகிறார்.
“இது தமிழ்நாடு அல்ல. நீங்களும் திரையரங்குக்கு வந்துள்ள ரசிகர்கள் அல்ல. தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்,” என்று அறிவுறுத்துகிறாராம் அஜித்.

