உசுரே நீதானே: துஷாரா விஜயன்

1 mins read
44254fa4-f7e5-42a3-9d38-38a5451a49d2
துஷாரா விஜயன், தனுஷ். - படம்: ஊடகம்

‘ராயன்’ படத்தில் தனுஷுக்குத் தங்கையாக நடித்திருந்த துஷாரா விஜயன், தனுஷின் அர்ப்பணிப்பு பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்.

துஷாரா விஜயனுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி ஆண்டாகவே மாறியுள்ளது. தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ‘ராயன்’ திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த துஷாரா விஜயன் தொடர்ந்து தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி ஏகப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

‘ராயன்’ திரைப்படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார். சண்டைக் காட்சிகள், கொலை செய்வது, பலாத்கார காட்சி என தைரியமாக நடித்திருந்தார்.

‘வேட்டையன்’ திரைப்படத்தில் ஒட்டுமொத்த படமே அவர் நடித்த சரண்யா டீச்சரின் மரணத்தைச் சுற்றியே நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டியில் தனுஷ் குறித்து பல்வேறு விஷயங்களை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் குறித்து சமூக வலைத்தளத்திலும் சினிமா வட்டாரத்திலும் பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்பி வரும் நிலையில், “தனுஷ் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. தனுஷ் மிகவும் எளிமையானவர். அவர் நடிக்கும்போது அவருடைய அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டவேண்டிய ஒன்று,” என்று அவரைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசியிருந்தார்.

அதைப் பார்த்த தனுஷின் ரசிகர்கள் ‘உசுரே நீதானே! தங்கைப் பாசம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என துஷாராவைப் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திநடிகைதனுஷ்