கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி திரைகாண இருந்தது. எனினும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையவில்லையாம்.
இதையடுத்து, டிசம்பர் 12ஆம் தேதி படம் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மெய்யழகன்’ படத்தையடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படம் ‘வா வாத்தியார்’.
கிருத்தி ஷெட்டி நாயகியாகவும் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

