‘வாடிவாசல்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கும் ‘வாடிவாசல்’, எழுத்தாளர் செல்லப்பாவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.
இதற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் சூர்யா.
எனினும் அறிவிப்பு வெளிவந்த பின்னரும் இப்படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இடையில் சூர்யாவும் வெற்றிமாறனும் வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், வரும் பொங்கல் தினத்தன்று இப்படத்தில் பணியாற்ற உள்ள கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2025 மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.