கோடம்பாக்கத்தில் வடிவேலின் இரண்டாவது சுற்று ஆட்டம் அவருக்கு சாதகமாக உள்ளது. முன்புபோல் பரபரப்பான நடிகராக வலம் வருகிறார் வைகைப் புயல்.
அவர் சுந்தர்.சியுடன் நடித்திருக்கும் ‘கேங்கர்ஸ்’ படம் இம்மாதம் வெளியாகிறது. இதையடுத்து ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், ஃபகத் பாசிலுடன் நடித்திருக்கும் ‘மாரீசன்’ ஜூலையில் வெளியாகிறது.
தவிர, பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் இணைகிறார். பிரபுதேவா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘மைக்கேல் முசாசி’ என்கிற படத்தை இயக்கிய சாம் ரோட்ரிகஸ்தான், பிரபுதேவா - வடிவேலு கூட்டணியையும் இயக்கப் போவதாகத் தகவல்.
ரசிகர்கள் வடிவேலின் பழைய நகைச்சுவைக் காட்சிகளை இன்னும் மறக்கவில்லை. அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகளில் பெரும்பாலானவை யூடியூப் தளத்தில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.

