என்னைத் துன்புறுத்துகிறார் வடிவேலு: சாடும் சிங்கமுத்து

1 mins read
19c04180-f776-4672-8188-86a3ee7dd966
சிங்கமுத்து, வடிவேலு. - படம்: ஊடகம்

நடிகர் சிங்கமுத்து மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார் வடிவேலு.

தன்னைப் பற்றி ஒரு பேட்டியில் சிங்கமுத்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் என்றும் தமக்கு நஷ்ட ஈடாக ஐந்து கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வடிவேலு வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிங்கமுத்து, வடிவேலுவின் வளர்ச்சிக்குத் தாமே முக்கிய காரணம் என்றார்.

“என்னைத் துன்புறுத்தும் விதமாக இந்த வழக்கை வடிவேலு தாக்கல் செய்துள்ளார். அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னைப் பற்றி தவறாகச் சித்திரித்தார்.

“அவரைப் பற்றி பேட்டி அளிக்கக் கூடாது என்று கூறுவதற்கு எந்தவிதமான உரிமையும் அவருக்கு இல்லை,” என்று சிங்கமுத்து தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்