'இசைப்புயல்' இசையில் பாடிய 'வைகைப்புயல்'

'இசைப்புயல்' இசையில் பாடிய 'வைகைப்புயல்'

1 mins read
5c801ad2-9680-460e-99a2-d327c63ae989
படம்: டுவிட்டர் -

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி உள்ளார் வடிவேலு. இந்தத் தகவல் வெளியானது முதல் தமிழ் சினிமா ரசிகர்கள் அப்பாடல் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் 'மாமன்னன்'. இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் பகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ரகுமான், வடிவேலு கூட்டணியில் உருவான பாடல் இப்படத்தில்தான் இடம்பெற்றுள்ளது.

படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து 'மாமன்னன்' படத்தின் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் வெளியான இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ரகுமான் இசையில் வடிவேலு பாடிய தகவலையும், பாடல் பதிவின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலை விரைவில் வெளியிட உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வம் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஏ.ஆர்.ரகுமான்திரைச்செய்திசினிமா