‘விஜய் 69’வது படத்தில் நடிகை வரலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது தெலுங்குத் திரை உலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார் வரலட்சுமி.
ஐந்துக்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களில் நடித்து வரும் அவர், நல்ல கதைகள் அமைந்தால் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடிக்கத் தவறுவதில்லை.
அந்த வகையில் ‘விஜய் 69’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
ஏற்கெனவே விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி. மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது உற்சாகம் அளிப்பதாக இவர் கூறியுள்ளார்.