சிறு வயதில் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற தென்னிந்திய மொழிகளிலும் பல படங்களில் நடித்தார்.
அண்மையில் வரலட்சுமிக்கு திருமணமானது. அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் அவர் நடுவராக உள்ளார்.
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியின்போது, சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டார்.
“என்னுடைய சிறு வயதில் அப்பா, அம்மா இருவரும் என்னை மற்றவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.
“அந்தச் சமயங்களில் ஐந்து, ஆறு பேர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர்,” என்று வரலட்சுமி வேதனையுடன் குறிப்பிட்டார்.
அவருக்குப் பலர் சமூக ஊடகங்கள் வழி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.