நடிகை வரலட்சுமி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சரஸ்வதி’.
சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் வேலைகளைத் தொடங்கிய அவர், ஒரே மூச்சாகப் படப்பிடிப்பை முடித்து முழுப் படத்தையும் நிறைவு செய்துவிட்டார்.
படப்பிடிப்பின் கடைசி நாளன்று இவர் எடுத்த புகைப்படங்களைத் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை வரலட்சுமி, “இது ஒரு சிறந்த பயணம். படப்பிடிப்பில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் தாமே நாயகியாக நடித்து, தனது தங்கை பூஜாவுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார் வரலட்சுமி.
மேலும் ராதிகா சரத்குமார், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘சரஸ்வதி’ படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியீடு காண உள்ளது.
இன்றைய இளம் ரசிகர்களை மனத்தில் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளதாகச் சொல்கிறார்.

