‘பிக்பாஸ்’ புகழ் நடிகை சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
‘வாரிசு’, ‘துக்ளக் தர்பார்’, ‘காபி வித் காதல்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், கார்த்திக் சங்கர் என்பவரைக் காதலித்து மணந்தார்.
பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தற்போது விவாகரத்தும் பெற்றுள்ளனர்.
“விவாகரத்துக்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. முன்பைவிட இப்போது வலிமையாக இருப்பதாக உணர்கிறேன்,” என்கிறார் சம்யுக்தா.