தெலுங்குப் படத்தில் நவநாகரிக வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வசுந்தரா.
‘பேராண்மை’ படத்தில் நடித்த ஐந்து நாயகிகளில் ஒருவரான இவர், தொடர்ந்து எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ‘கலி’ என்ற படத்திலும் எதிர்மறை வேடத்தில்தான் நடித்துள்ளேன்.
“சுவாரசியமான கதாபாத்திரமாக அமைந்ததால் மிகவும் ரசித்து நடிக்க முடிந்தது,” என்கிறார் வசுந்தரா.
அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வசுந்தரா.

