‘வீர தீர சூரன்- 2’ படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது.
மேலும், படத்தயாரிப்பு நிறுவனம் ரூ.7 கோடியை 48 மணி நேரத்தில் வைப்புத் தொகையாக செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நடைமுறைகளைக் கண்காணிக்க வழக்கறிஞர் ஆணையரையும் நியமித்திருந்தது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பி4யூ நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத்தீர்வு எட்டப்பட்டதாகக் கூறி முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமரசம் தொடர்பாக இருதரப்பும் எழுத்துபூர்வ ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ‘வீர தீர சூரன்- 2’ படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார்.