பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

1 mins read
05255bb4-c4de-4465-a240-b875befe8641
தனது தாயார் மனோரமாவுடன் பூபதி. - படம்: ஊடகம்

மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவின் மகன் பூபதி அக்டோபர் 23ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 70.

நகைச்சுவை, குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மனோரமா. அவர் கடந்த 2015ஆம் ஆண்டு காலமானார்.

அவருடைய ஒரே மகனான பூபதி, மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அக்டோபர் 23ஆம் தேதி அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவிற்குத் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னர் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்.

குறிப்புச் சொற்கள்