வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘அரசன்’. அப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கோவில்பட்டியில் தொடங்கியது.
முதற்கட்ட படப்பிடிப்பில் தாடி, மீசை இல்லாமல் இளமையான தோற்றத்தில் சிம்பு நடித்து வந்தார். இதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்படத்தில் சமந்தா கதாநாயகியாக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிக் கவனம் ஈர்த்து வருகிறது.
ஏற்கெனவே, இதற்கான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சமந்தாவின் முடிவுக்காகப் படக்குழுவினர் காத்துக்கிடக்கின்றனராம்.
அண்மையில், தனது காதல் கணவர் ராஜ் நிடிமோருவுடன் தேனிலவு சென்றுள்ள சமந்தா, வந்தபிறகு தான் ‘அரசன்’ படத்தில் நடிப்பாரா, இல்லையா என்பது தெரியவரும் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெற்றிமாறன், சிம்பு கூட்டணியில் உருவாகிவரும் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.
விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

