புதிய திரைப்படங்களுக்கான விமர்சனங்களை உடனுக்குடன் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களால்தான் தனது இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான ‘வேட்டையன்’ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்கிறார் இயக்குநர் ஞானவேல்.
“திரைப்படங்களுக்கான நியாயமான விமர்சனங்கள் குறைந்துவிட்டன. ‘வேட்டையன்’ படம் மோசம் என முதல் நாளில் இருந்தே சிலர் சொல்லத் தொடங்கினர். இதனால் படம் பார்ப்பவர்களின் மனநிலையும் அதேபோல் மாறிவிடுகிறது.
“அந்த வகையில் ‘வேட்டையன்’ படத்துக்கு கள்ளிப்பால் கொடுத்துவிட்டனர். ஒரு படத்தில் நடிக்கும் ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் எப்படி நடித்திருந்தாலும் அதைக் குறைகூற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்போதெல்லாம் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்,” என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ஞானவேல்.

