18 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி: சௌந்தர்யா மகிழ்ச்சி

18 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி: சௌந்தர்யா மகிழ்ச்சி

2 mins read
c7a69e74-ed0e-47ae-a14a-cf1c7bdb948b
மகள் சௌந்தர்யாவுடன் ரஜினி. - படம்: சென்னைவிஷன்

திரையுலகில் 18 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு முதன்முதலாக ஒரு பெரிய வெற்றி அமைந்துள்ளது.

அவரது தயாரிப்பில் உருவான ‘வித் லவ்’ திரைப்படம் விமர்சன, வசூல் ரீதியில் அடைந்துள்ள வெற்றி மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன், அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்துள்ள படம் ‘வித் லவ்’. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார்.

படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அதில் சௌந்தர்யா கலந்துகொண்டு பேசியபோது, தன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றார்.

“இப்படத்தின் சிறப்புக் காட்சியைத் திரையிட்ட பின்னர் அப்பாவையும் அம்மாவையும் பார்க்கச் சென்றேன். அப்போது இருவரும் என்னை அரவணைத்து அன்பாகச் சிரித்தனர். அப்பாவைப் பார்த்து, ‘இதுதான் வெற்றியா’ என்று கேட்டேன்.

“அதற்கு அவர், என்னைப் பார்த்து நிறைவான அன்புடன் சிரித்தார். அந்தச் சிரிப்பை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது என்று கூறியுள்ளார் சௌந்தர்யா.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக திரைpfலகில் பணியாற்றிவரும் தனக்கு, இந்த வெற்றி கிடைப்பதற்கு ‘வித் லவ்’ படக்குழுதான் முக்கியக் காரணம் என்றும் அதற்காக அக்குழுவுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன் என்றும் சௌந்தர்யா கூறியுள்ளார்.

இனி தொடர்ந்து இதுபோன்ற நல்ல படைப்புகளைத் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

இதனிடையே, அண்மையில் ‘வித் லவ்’ படக்குழுவினரைத் தன் வீட்டுக்கு வரவழைத்த ரஜினிகாந்த், அவர்களுடன் உற்சாகத்துடன் கலந்துரையாடினார்.

அச்சமயம் தமது திரையுலக அனுபவங்களை ரஜினி விவரிக்க, அவரைச் சந்தித்த இளங்குழுவினர் வியப்பில் மூழ்கினர். அவரது பேச்சு மிகவும் சுவாரசியமாக இருந்ததாம்.

குறிப்புச் சொற்கள்
ரஜினிதிரைப்படம்இயக்குநர்வெற்றி