அஜித் (படம்) நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ‘டீசர்’ வியாழக்கிழமை இரவு திடீரென வெளியானது.
முன்னறிவிப்பு இன்றி வெளியானபோதும், சிலமணி நேரங்களிலேயே ஏறக்குறைய ஐந்து மில்லியன் பார்வைகளை இந்தக் காணொளி பெற்றுள்ளது. மேலும், 25,000க்கும் மேற்பட்ட கருத்துகள் பின்னூட்டமிடப்பட்டுள்ளன.
இது ஹாலிவுட்டில் வெளியான ‘பிரேக்டவுன்’ என்ற படத்தின் சாயலில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனினும், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.