அஜித் நடிப்பில் உருவாகி உள்ள ‘விடாமுயற்சி’ படம், பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு அவர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
என்ன காரணத்தால் பட வெளியீடு தாமதமாகிறது என்பது குறித்து தகவல் ஏதுமில்லை.
இது குறித்து லைகா நிறுவனம் விரைவில் விளக்கம் அளிக்கக்கூடும்.