தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனுஷ் ரசிகர்களால் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்

2 mins read
0d8fbed8-32e2-438c-ba6c-d6154d6a2a58
விக்னேஷ் சிவன். - படம்: ஊடகம்

விக்னேஷ் சிவனுக்கும் தனுஷுக்கும் இடையே ‘நயன்தாரா - பியான்ட் த பேரிடேல்’ விளம்பர படம் மூலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனுஷின் ரசிகர்கள் வலைத்தளங்களில் விக்னேஷ் சிவனைப் பற்றி காரசாரமான கருத்துகளை பதிவிட்டதால் விக்னேஷ் சிவன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறினார்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த ஆவணப்படத்தில் ’நானும் ரௌடி தான்’ என்ற படத்தின் சில காட்சிகள் இணைக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட 3 பக்க அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தளத்திலும், இன்ஸ்டகிராமிலும் தனுஷ் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தார். அதனால், கோபமடைந்த தனுஷின் ரசிகர்கள் காரசாரமான கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் ஒரு யூடியூப் சேனலில் இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களின் பேட்டி இடம் பெற்றிருந்தது. அந்தக் காணொளியைப் பகிர்ந்து ‘இந்த ஆண்டில் ஒரு படம் கூட இயக்காத விக்னேஷ் சிவன் எப்படி இதில் இடம் பெறலாம்?’ என பலரும் கேள்வி கேட்டு கிண்டலாகப் பதிவிட்டு வந்தனர்.

வலைத்தளங்களில் தன்னைப் பற்றி பலரும் கிண்டலாகப் பதிவுகளைப் போடுவதால் விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தள கணக்கை மூடிவிட்டார் என்று கூறப்படுகிறது. இது நயன்தாராவின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநயன்தாரா