விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவனமும் ‘ரவுடி பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முழுக்க முழுக்க காதல் கதைக்களமாக இப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் படம் வருகிற மே மாதம் 16ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.