விஜய் நடிப்பில் உருவாகிறது ‘ஜன நாயகன்’

விஜய் நடிப்பில் உருவாகிறது ‘ஜன நாயகன்’

படம்: ஊடகம்

26 Jan 2025 - 3:59 pm

1 mins read

விஜய் நடிப்பில் உருவாகும் 69வது படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனத் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை அறிமுகப்படுத்தும் விதமாக சுவரொட்டியும் வெளியிடப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ள காட்சியைப் பார்க்கும்போது அரசியல் கதைக்களத்துடன் உருவாகும் படம் என்பது தெளிவாகத் தெரிகிறது என விஜய் ரசிகர்கள் கூறுகின்றனர்.

கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது.

இதில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
விஜய்திரைப்படம்தலைப்புஅரசியல்கதைக்களம்