நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் படங்களைத் தவிர, மற்ற படங்களுக்கு இசையமைப்பதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு இவரது இசையில் உருவான ‘மத கஜ ராஜா ’ திரைப்படம் அண்மையில் வெளியீடு கண்டது.
இப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்கிறாராம்.
இது தொடர்பாக தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் அவர் ஆலோசித்து வருவதாகத் தகவல்.