சொந்த செலவில் நூறு ரசிகர்களைச் சுற்றுலா அனுப்பிவைத்த நாயகன்!

சொந்த செலவில் நூறு ரசிகர்களைச் சுற்றுலா அனுப்பிவைத்த நாயகன்!

1 mins read
abc8ee68-0edd-4406-bf0a-efcb5920835e
மணாலியில் இங்குதான் அந்த நூறு ரசிகர்களும் தங்கியுள்ளனர். படம்: டுவிட்டர்/விஜய் தேவரகொண்டா -
multi-img1 of 2

முன்னணி இந்தியத் திரைப்பட நாயகர்களில் ஒருவராகத் திகழும் விஜய் தேவரகொண்டா, கடந்த சில ஆண்டுகளாகத் தம் ரசிகர்கள் சிலரைத் தமது சொந்த செலவில் சுற்றுலா அனுப்பி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அவ்வகையில், இம்முறை தம் ரசிகர்கள் நூறு பேரை மலைப்பகுதியான மணாலிக்குச் சுற்றுலா அனுப்பிவைத்துள்ளார் விஜய். அவர் ஏற்கெனவே அவ்வாறு செய்வதாக உறுதியளித்திருந்தார்.

இதன் தொடர்பில் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அந்த நூறு ரசிகர்கள் விமானத்தில் அமர்ந்திருக்கும் காணொளியையும் பகிர்ந்துள்ளார்.

அக்காணொளியை தம் ரசிகர்களே தமக்கு அனுப்பிவைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரையிலான அந்தச் சுற்றுலாவிற்கு ஆகும் எல்லாச் செலவுகளையும் விஜய்யே ஏற்றுக்கொண்டுள்ளார்.

இப்போது, 'குஷி' எனும் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் விஜய். நகைச்சுவையும் காதலும் கடந்த இப்படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்கிறார் சமந்தா. இன்னும் 4-5 வாரத்திற்குப் படப்பிடிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.