புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. அதற்கு ‘ரணபலி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னதாக இந்தியாவில் நடந்த ஆங்கிலேய ஆட்சியை மையமாக வைத்து அந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
‘ரணபலி’ விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாகும். இப்படம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையீடு காணவுள்ளது.
இப்படத்தை ராகுல் சங்கிரித்யான் இயக்க, அஜய்-அதுல் இசையமைக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்து வருகிறது.

