தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த விலையுயர்ந்த பரிசு

1 mins read
0f0bcb03-ace9-4ab1-b63f-81a7467415dd
‘தி கோட்’ படத்தின் நிகழ்ச்சியில் விஜய், சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தி கோட்’. கலவையான விமர்சனங்களாக இருந்தாலும், வசூலில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதில் பிரபு தேவா, பிரசாந்த், சிநேகா, லைலா, ஜெயராம், மோகன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் பலரும் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் பார்வையாளர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், ‘தி கோட்’ படப்பிடிப்பின்போதே சிவகார்த்திகேயனுக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கி அவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் விஜய். இதன் மூலம் இருவருக்கும் இடையே பெரும் நட்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வருகிறது என்கிறது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரையரங்கு