கார்த்தியின் ‘கைதி 2’ல் குரல்கொடுக்கும் விஜய்

1 mins read
2f9c1434-f6f0-4d03-a17c-c623d8ceb7db
‘கைதி 2’ படத்துக்காக நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து மீண்டும் பணியாற்றவுள்ளார் லோகேஷ். - படம்: இணையம்
multi-img1 of 2

லோகேஷ் கனகராஜின் இயக்கத்திலான ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் வசூலை அள்ளியதைத் தொடர்ந்து, கோலிவுட்டில் ‘லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ்’ (எல்சியு) பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘கைதி 2’ படத்துக்காக நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து மீண்டும் பணியாற்றவுள்ளார் லோகேஷ். அண்மையில் கார்த்தி இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

‘கைதி 2’ல் ‘எல்சியு’வைச் சேர்ந்த அனைத்து நடிகர்களும் இடம்பெறுவர் என்று ‘கிளிட்ஸ்’ ஊடகத்தளம் தெரிவித்துள்ளது. கார்த்தி (டில்லி), சூர்யா (ரோலெக்ஸ்), கமல் ஹாசன் (விக்ரம்) ஆகியோர் இப்படத்தில் ஒன்றிணைவதாகக் கூறப்படுகிறது.

தமது கடைசி திரைப்படமான ‘கோட்’ படத்துக்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலக நடிகர் விஜய் முடிவெடுள்ளதால், ‘கைதி 2’ல் அவரது குரலை மட்டும் பயன்படுத்த திரைப்படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் இயக்குநர் லோகேஷ் பணியாற்றவுள்ளார். தங்கக் கடத்தல் சம்பந்தப்பட்ட இப்படத்தில் சத்தியராஜ், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கான தயாரிப்புக்கு முந்திய பணி நிறைவுபெற்றுள்ள வேளையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்