‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டைத் தள்ளி வைக்கும் விஜய்

‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டைத் தள்ளி வைக்கும் விஜய்

படம்: இந்திய ஊடகம்

06 Oct 2025 - 2:44 pm

1 mins read

தீபாவளியன்று விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் வெளியாக இருந்த நிலையில், தற்பொழுது அந்தப் பாடல் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறது படக்குழு.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்காலிகமாக அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.

‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதற்கிடையில் இந்தப் படத்தின் முதல் பாடலை இவ்வாண்டு தீபாவளி தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தின்போது கரூரில் 41 பேர் பலியாகினர். இதனால் விஜய் மற்றும் அவரின் கட்சி குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அதனால் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடலை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என படக்குழுவிடம் விஜய் கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்