'துணிவு' படத்தை விஞ்சியது 'வாரிசு'

'துணிவு' படத்தை விஞ்சியது 'வாரிசு'

1 mins read
0a35ed5a-6a7b-4db0-8871-dba3e870ed84
அஜித் நடித்துள்ள 'துணிவு', விஜய்யின் 'வாரிசு' திரைப்படங்கள் இந்தியாவில் தலா ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன. -

அஜித் நடித்துள்ள 'துணிவு', விஜய்யின் 'வாரிசு' திரைப்படங்கள் இந்தியாவில் தலா ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு இவ்விரு திரைப்படங்களும் கடந்த வாரம் ஒரே தேதியில் வெளியாகின. இவை வெளியான முதல் வாரயிறுதியில், உலகளவில் 'துணிவு' படத்தை 'வாரிசு' விஞ்சியது. ஆனால், இந்தியாவில் இவை இரண்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அஜித், விஜய்யின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன. இத்திரைப்படங்கள் வெளியான முதல் நாளில், தமிழ்நாட்டில் 'துணிவு' முன்னிலை வகித்தது. ஆனால், அதற்கு அடுத்த நாளிலிருந்து 'துணிவு' அதன் முன்னிலையை 'வாரிசு' படத்திடம் இழந்துவிட்டது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அனைத்துலகச் சந்தைகளில் 'துணிவு' படத்தை 'வாரிசு' விஞ்சிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவில் 'வாரிசு' படத்தின் வசூல் US$1 மில்லியனைத் தாண்டிவிட்டது. 'துணிவு' படம் US$900,000 வசூல் செய்துள்ளது.