தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் சேதுபதி, சாய் பல்லவிக்கு விருதுகள்

2 mins read
66949817-b016-4a7b-b55e-b05bf57e9a06
‘அமரன்’ படத்தில் மக்களின் மனதைக் கொள்ளையடித்த சாய் பல்லவி சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். - படம்: சமூக ஊடகம்
multi-img1 of 2

சென்னை அனைத்துலகத் திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கும், சாய் பல்லவிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

‘மகாராஜா’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. விருதுடன் அவருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

‘அமரன்’ படத்தில் மக்களின் மனதைக் கொள்ளையடித்த சாய் பல்லவி, சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். விருதுடன் அவருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

‘மக்களுக்குப் பிடித்த நடிகர்’ என்ற பிரிவில் ‘மெய்யழகன்’ படத்தில் நடித்த அரவிந்த்சாமிக்கு விருது வழங்கப்பட்டது.

‘வேட்டையன்’ படத்தில் நடித்த துஷாரா விஜயனுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்த நடிகர் தினே‌ஷுக்கு வழங்கப்பட்டது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ‘வாழை’ படத்தில் நடித்த பொன்வேல் வென்றார்.

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இரண்டாவது சிறந்த படமாக ‘லப்பர் பந்து’க்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் லட்சுமணன் ஆகியோருக்குத் தலா ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

180 திரைப்படங்கள்

திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளின் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குறிப்பாக விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மட்டுமின்றி, பிரபல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்களும் திரையிடப்பட்டன.

தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்தியத் திரைப்பட திறனாய்வுக் கழகம் 22வது சென்னை அனைத்துலகத் திரைப்பட விழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கு, பி.வி.ஆர். ராயப்பேட்டை, பி.வி.ஆர். மயிலாப்பூர் மற்றும் ரஷ்யன் ஹவுஸ் ஆழ்வார்ப்பேட்டை ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெற்றது.

திரைப்பட விழா 2024, டிசம்பர் 12 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்