பிக்பாஸ் ஆகும் விஜய் சேதுபதி

1 mins read
de76f13a-8904-43ed-b0cb-a7e901a3e8b9
காணொளியில் விஜய் சேதுபதி மிடுக்காக ஆடை அணிந்து கவனத்தை ஈர்த்தார். - படம்: ஊடகம்

தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்.

அது தற்போது 8வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இந்நிலையில் இந்த பருவத்தை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. காணொளியில் விஜய் சேதுபதி மிடுக்காக ஆடை அணிந்து கவனத்தை ஈர்த்தார்.

இதற்கு முன்னர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

7 ஆண்டுகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளதால் பிக்பாஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்