பிச்சைக்காரனாக விஜய் சேதுபதி

1 mins read
4aaeb480-ca42-4fb5-804b-51dbc0246b3e
விஜய் சேதுபதி. - படம்: மாலை மலர்

பாண்டிராஜ் இயக்கிய ‘தலைவன் தலைவி’ படத்தைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகை தபு, மலையாள நடிகை சம்யுக்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பூரி ஜெகநாத், நடிகை சார்மி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருப்பதாகவும் அவர் நடிகை தபுவைக் காதலிப்பது போன்று கதை அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் விஜய் சேதுபதி, இந்த வேடத்தில் எப்படி நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்