தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கரம் மசாலா’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் சேதுபதி

1 mins read
5af52fc0-4b40-406b-a328-d40704d871c5
‘கரம் மசாலா’ படச்சுவரொட்டி. - படம்: ஊடகம்

நடிகர்கள் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குநர் மஜீத் இயக்கத்தில் முழு நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள படம் ‘கரம் மசாலா’. மஜீத் இதற்கு முன்பு ‘தமிழன்’ படத்தை இயக்கியவர்.

‘கரம் மசாலா’ படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழுவினர் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி ‘கரம் மசாலா’ படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி உற்சாகப்படுத்தி உள்ளார்.

“இந்த நவீன உலகத்தில் எல்லாமே தரகர் (புரோக்கர்) வழியாகத்தான் நடக்கும் என்றாகிவிட்டது. பல வகையான தரகர்கள் மூலமாகத்தான் நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது.

“உதாரணத்துக்கு, நம் வீடு, திருமணம், தொழில் என அனைத்திலும் அவர்களின் பங்கு உள்ளது. அந்த தரகர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கி உள்ளோம்,” என்கிறார் இயக்குநர் அப்துல் மஜீத். 

இப்படத்தில் விமல் நாயகனாக நடித்துள்ளார். சாம்பிகா டயானா நாயகியாகவும் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்தது.

விஜய் சேதுபதி நேரில் வந்து வாழ்த்திய உற்சாகத்தில் மேலும் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகச் சொல்கிறார் மஜீத்.

குறிப்புச் சொற்கள்