கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி

1 mins read
4c54aa2b-3050-4b19-b35d-ee2b9eb3a74b
கிருத்திகா உதயநிதி, விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படம் அண்மையில் வெளியீடு கண்டது. வசூல் ரீதியில் பெரிதாகச் சாதிக்கவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காமல் ஓரளவு ரசிக்க வைத்தது என்கிறார்கள் விமர்சகர்கள்.

இதையடுத்து, விஜய் சேதுபதியிடம் கிருத்திகா கதை கூறியிருப்பதாகவும் அது பிடித்துப்போனதால் உடனடியாகக் கால்ஷீட் ஒதுக்க அவர் முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்ல, திரைக்கதையும் மிகச் சிறப்பாக இருப்பதாக அவர் கூறினாராம். இதனால் கிருத்திகா உற்சாகமாகிவிட்டதாக அவரது குழுவினர் கூறுகின்றனர்.

‘காதலிக்க நேரமில்லை’ படம் குறித்த நேரத்தில் வெளியாகி இருந்தால் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை கிருத்திகா முன்பே தொடங்கி இருப்பாராம்.

எனவே, புதுப்படத்தை உடனே தொடங்கி, இரண்டு கட்டங்களாகப் படப்பிடிப்பை நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்