‘பாக்கெட் நாவல்’ படத்தில் விஜய் சேதுபதி

‘பாக்கெட் நாவல்’ படத்தில் விஜய் சேதுபதி

1 mins read
8af021fb-4e95-4147-8482-e23360ffbb7c
‘பாக்கெட் நாவல்’ பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி. - படம்: ஹாலிவுட்ரிப்போர்ட்டர் இண்டியா.காம்

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா.

இவர் இயக்கிய ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த சேதுபதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர். இருவரும் உடனடியாக அடுத்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் ‘பாக்கெட் நாவல்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

‘சூப்பர் டீலக்ஸ்’ படக்குழுவின் தயாரிப்பாளர் எழில் மதி, படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன் ஆகியோர் மீண்டும் தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்துள்ளனர்.

ராஜ் ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அரவாணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

குறிப்புச் சொற்கள்