விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தைக் கோடை விருந்தாக வெளியிட உள்ளனர்.
சீட்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் 13 சீட்டுகளில் முதல் சீட்டுதான் ‘ஏஸ்’.
இது குண்டர் கும்பலைப் பற்றிய கதையுடன் உருவாகிறது என ஒரு தகவல் பரவியது. ஆனால் படக்குழுவினர் அதை மறுக்கிறார்கள்.
``இது அப்படிப்பட்ட படமன்று. அதேசமயம், குற்றச்சம்பவம், கொள்ளை, சூதாட்டம் தொடர்பான காட்சிகள் எல்லாம் இருக்கும். முக்கியமாக அழகான காதலும் எதிர்மறை நகைச்சுவையும் இருக்கும்.
“பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது ஓர் இனிமையான அனுபவம்,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் விஜய் சேதுபதி.

