விஜய் சேதுபதி: இனிமையான அனுபவத்தை தந்த மலேசிய படப்பிடிப்பு

1 mins read
5b7e7bb1-cbf2-4617-84d9-7b6713a5aa62
‘ஏஸ்’ படச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தைக் கோடை விருந்தாக வெளியிட உள்ளனர்.

சீட்டாட்டத்தில் பயன்படுத்தப்படும் 13 சீட்டுகளில் முதல் சீட்டுதான் ‘ஏஸ்’.

இது குண்டர் கும்பலைப் பற்றிய கதையுடன் உருவாகிறது என ஒரு தகவல் பரவியது. ஆனால் படக்குழுவினர் அதை மறுக்கிறார்கள்.

``இது அப்படிப்பட்ட படமன்று. அதேசமயம், குற்றச்சம்பவம், கொள்ளை, சூதாட்டம் தொடர்பான காட்சிகள் எல்லாம் இருக்கும். முக்கியமாக அழகான காதலும் எதிர்மறை நகைச்சுவையும் இருக்கும்.

“பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது ஓர் இனிமையான அனுபவம்,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் விஜய் சேதுபதி.

குறிப்புச் சொற்கள்