‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை வழிநடத்த விஜய் சேதுபதிக்கு திரைப்படத்தை விட மூன்று மடங்கு சம்பளம்

1 mins read
0aeec2a4-8cab-4e66-8418-d927669e3a83
‘பிக் பாஸ்’ சீசன் 8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள நடிகர் விஜய் சேதுபதி. - படம்: ஊடகம்

‘பிக் பாஸ்’ சீசன் 8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ள விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

இந்தச் சம்பளம் அவர் ஒரு திரைப்படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விடவும் மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கடந்த ஏழு பருவங்களாக உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அவருக்கு சம்பளமாக ரூ.100 முதல் ரூ.120 கோடி வரை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘பிக் பாஸ்’ சீசன் 8 நிகழ்ச்சியைத் தன்னால் தொகுத்து வழங்கமுடியாது என்றும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கப் போகிறேன் என்றும் கமல்ஹாசன் கூறிவிட்டதை அடுத்து, விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான காணொளியும் இணையத்தில் பரவி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு ரூ.50 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

விஜய் சேதுபதி தற்போது ஒரு படத்திற்கு ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் இதைவிடவும் ஏறக்குறைய மூன்று மடங்கு சம்பளம் ‘பிக் பாஸ்’ சீசன் 8 நிகழ்ச்சிக்கு வழங்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்