சிம்புவுடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி

2 mins read
85b4eb0c-e51e-4441-b6aa-4a421d3c0a85
சிம்பு, விஜய் சேதுபதி. - படம்: இந்திய ஊடகம்

‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. இதற்கு வேல்ஸ் நிறுவனம் – சிம்பு இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறப்படுகிறது.

தற்போது சிம்புவுடன் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு சிம்பு – விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். சிம்பு இல்லாமல் இதர காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பான்-இந்தியா’ திரைப்படம், ‘#PuriSethupathi’யின் முழுப் படப்பிடிப்பும் அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது.

இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை, படக்குழுவினர் மகிழ்ச்சியுடனும் உணர்ச்சிபூர்வமாகவும் ஒரு காணொளியை வெளியிட்டு கொண்டாடினர்.

காணொளியில் விஜய் சேதுபதி, இயக்குநர் பூரி ஜெகன்னாத், குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை நினைவில் நிற்கக்கூடியதாக குறிப்பிட்டு, அவர்களை மிஸ் செய்யப் போவதாகக் கூறினார்.

இத்திரைப்படத்திற்கான விளம்பரப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

படத்தின் முதல் சுவரொட்டி, தலைப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ‘பான்-இந்தியா’ திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்